FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழியக்க விழுதானது தாய்மண்ணில் வேரானது!

கண்ணீர் பரல் தெறிக்ககண்ணகி சிலையும் அழகாலம் நகலெடுக்க முடியா

பகிர்:

கண்ணீர் பரல் தெறிக்க
கண்ணகி சிலையும் அழ
காலம் நகலெடுக்க முடியா
சீலச் சிலம்பொலி நின்றுவிட்டது!
அரும்பும் அக்கினிக் குஞ்சுகளை
அடைகாத்து வளர்த்து எடுத்து
சிவிலியாம்பட்டி திராவிடக் குயில்
சிறகுகளை உதிர்த்துக் கொண்டது
பாவேந்தர் படைவரிகளின்
பாடி வீடு சாய்ந்து விட்டது
சிந்தைக்கினிய சீறாவைப் 
பந்திவைத்த கரம் ஓய்ந்துவிட்டது
வல்அப்பன் பெரியார் கொடி வழி
செல்லப்பன் குருதிச்சித்திரம் காய்ந்து விட்டது
மேடைகளை விதவை ஆக்கி விட்ட
மேதமைத் தமிழ்ச் சான்றோர் இல்லை
இராவண காவியம் யாரிடம் கேட்போம்?
இலக்கியத் தமிழை எப்படி மீட்போம்?
விம்மும் நெஞ்சோடு தமிழியக்கம்
வீர வணக்கம் செலுத்துகிறது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments