சிரி... சிரி...
""ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போய் 3 மாதம் தங்கிட்டு வந்தா உடல் நிலை நல்லா முன்னேறும்னு டாக்டர் சொல்றாரு; நாம எங்கே போகலாம் சரசு?''""வேற டாக்டர் கிட்ட போகலாம்!''
மனைவி: திருடன் என்னை மிரட்டி பீரோ சாவி கேட்டப்ப நீங்க ஏன் வாயே திறக்கலை?
கணவன்: அவன் உன்னை மிரட்டினதைப் பார்த்து நான் வாயடைச்சுப் போயிட்டேம்மா.
""ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போய் 3 மாதம் தங்கிட்டு வந்தா உடல் நிலை நல்லா முன்னேறும்னு டாக்டர் சொல்றாரு; நாம எங்கே போகலாம் சரசு?''
""வேற டாக்டர் கிட்ட போகலாம்!''
""என்னது... நல்லவன் உளறினா மழை வருமா? என்னய்யா சொல்ற?''
""நல்லார் ஒருவர் உளரேல் 'னுவள்ளுவர் பாடியிருக்கிற குறள்தெரியாதா உங்களுக்கு ?''
Advertisement
Advertisement
""ஏன் முனியம்மா எதிர் வீட்டுல உன்னை வேலையை விட்டுத்தூக்கிட்டாங்க? நல்லவளாச்சே அவ ?''
""உங்க வீட்டுல நடக்கிற எதையும் நான் முழுசா சொல்றதில்லைங்கிற கோபம் அவுங்களுக்கு!''
- வி. ரேவதி, தஞ்சை.
""ஏன் இப்படி வீடு வீடா பிச்சை வாங்கி சாப்பிடறே?''
""ஓட்டல் மீல்ஸ் எனக்கு சூட் ஆகல தாயீ''
- ஏ. நாகராஜன் பம்மல்.
""காலையில் ஆறு மணிக்கு போன் பண்ணினால் ஏன் எடுத்து பேசல?"
"எடுத்து கொட்டாவி விட்டது காதில் கேட்கலயா?''
""ஹெலிகாப்டர்ல வாழ்கன்னு கூவிட்டுப் போறாங்களே, ஏன்?''
""வானளாவப் புகழறாங்களாம்''
""பஸ், ரயில், கார்னு எதிலும் வராதேன்னு விருந்தாளியைச் சொன்னேன்''
""என்ன ஆச்சு?''
""கப்பலில் வந்து இறங்கிட்டார்''
- பர்வதவர்த்தினி, சென்னை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.