முகப்பு
தினமணி கதிர்

மெதுவா... மெதுவா..!

ரயிலில் பயணிக்கும்போது, பலரும் 'கட்டை வண்டியில் பயணிக்கிறோம்' என்பார்கள்.

Updated On : 24 மே 2026, 4:05 am IST
- Nandini Thippanaboina
பகிர்:

ரயிலில் பயணிக்கும்போது, பலரும் 'கட்டை வண்டியில் பயணிக்கிறோம்' என்பார்கள். ஆனால், அதைவிட நாட்டிலேயே மிக மெதுவாகப் பயணிக்கும் ரயில் என்றால், மேட்டுப்பாளையம் - உதகை இடையே செல்லும் ரயில்தான். மணிக்கு 9 கி.மீ. வேகத்தில்தான் பயணிக்கிறது.

1908-இல் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையில் சமவெளியில் தொடங்கி, உதகையின் குளிர்ச்சியான பசுமையான மலைகளுக்குள் ரயில் செல்கிறது. மொத்தம் 46 கி.மீ. குறுகிய அகலப் பாதையில் நீலகிரி மலைகளின் மயக்கும் அழகுக்கு மிக அருகில் பயணிகளைக் கொண்டு செல்கிறது.

செங்குத்தான சரிவுகள், நிலச் சரிவுகள், அடர்ந்த வனப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் வழியே வளைந்து வளைந்து ரயில் செல்லும்போது, அதில் பயணிக்கும் அனுபவத்துக்காகவே இந்தப் பயணத்தை சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.

Advertisement

Advertisement

பெரும்பாலும் பனிமூட்டங்களாலும் மேகங்களாலும் இந்தப் பகுதிகள் சூழப்பட்டிருப்பதால், பயணிகள் பயணத்திடையே மனதுக்கும் உடலுக்கும் உற்சாக அனுபவத்தை அளிக்கும்.

2,200 மீ. உயரம் வரை பயணிக்கும் இந்த ரயில் பயணம் 208 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் வழியாகச் செல்லும். மேட்டுப்பாளையம்-

கூனூர் இடையே நீராவி எஞ்சினும், கூனூர்- உதகை இடையே டீசல் எஞ்சினும் என ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டும். கூனூர்-உதகை இடையே ஒரு மணி நேரத்தில் 19 கி.மீ. தொலைவு பயணம் செய்யலாம்.

மேட்டுப்பாளையம்-உதகை ரயிலில் முதல் வகுப்புக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு முந்நூறு ரூபாயும் கட்டணமாகும். கூனூர்-உதகை இடையே முதல் வகுப்புக்கு ரூ.550-ம், இரண்டாம் வகுப்புக்கு ரூ.125-ம் கட்டணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.