முகப்பு

ஒற்றாடல் உறவுகள்

அகில உலக கார்ப்பரேட் அரங்கை 'என்விடியா' நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் காதல் பிரச்னை புரட்டிப் போட்டுள்ளது.

24 வினாடிகள் முன்பு
ஒற்றாடல் உறவுகள்
ஆலிஸ் ஹூவாங், ஜென்சன்
பகிர்:

அகில உலக கார்ப்பரேட் அரங்கை 'என்விடியா' நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் காதல் பிரச்னை புரட்டிப் போட்டுள்ளது.

தைவானில் பிறந்த ஜென்சன், 1993-இல் 'என்விடியா'வை கிறிஸ் மலைக்கோவ்ஸ்க்கி, கர்டிஸ் பிரியம் என்பவர்களுடன் இணைந்து நிறுவினார். ஜென்சன் அமெரிக்க, தைவான் இரு நாட்டிலும் குடி உரிமை பெற்றுள்ளார். ஜென்சன் 1985-இல் 'மில்ஸ்' என அழைக்கப்படும் லோரி ஹுவாங்கை திருமணம் செய்துகொண்டார்.

ஜென்சன் - மில்ஸ் தம்பதிக்கு, மகன் ஸ்பென்சர், மகள் மேடிசன் வாரிசுகள். இருவரும் என்விடியாவில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலீல் என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இப்போது விசுவரூபம் எடுத்திருக்கும் பிரச்னையின் மையம் ஆலிஸ் ஹுவாங் (ஹுவாங் லீ). ஆலிஸ், என்விடியாவின் வாடிக்கையாளரான, சிங்கப்பூரில் இயங்கும் 'மெகாஸ்பீட்' தரவு மைய நிறுவனத்தின் மூத்த நிர்வாகி. அக்டோபர் 29 அன்று, 'ஆலிஸ் சீன உளவுத்துறை உளவாளி என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக' அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. பின்னர், ஜென்சன் - ஆலிஸ் இருவருக்கும் இடையே 'காதல்' இருந்ததாக 'ஃபைனான்சியல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது.

ஆண்டி பைரன், கிறிஸ்டின் கபோட்

சீன வெளியுறவுத் துறை, இந்த ஆலிஸ் ஹுவாங் எங்களது ஒற்றர் அல்ல என்று சொன்னாலும்; அமெரிக்கவின் உளவுத் துறை, இந்தச் சீனப் பெண் என்விடியா நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சீனாவுக்குக் கடத்தினார்; அதற்காகத்தான் நிறுவனத்தின் சிஇஓ-வை மோகவலையில் வீழ்த்தினார் என்று சொல்கிறது.

அமெரிக்க ராணுவத்தில் என்விடியா நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த ஏ.ஐ. தயாரிப்புகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க அரசில் தடை உள்ளது. ஆனால், காதல் வலையில் விழுந்த ஜென்சன், இந்த தொழில்நுட்பத்தை, இந்தப் பெண் சார்ந்துள்ள சிங்கப்பூர் நிறுவனம் வழியாக சீனாவுக்கு அனுப்பிட உதவியுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

2026 நவம்பர் 8 அன்று ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில், ஜென்சன், 'நான் என் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டேன். எனது செயல்கள் மனைவியையும், எனது வாரிசுகளையும் காயப்படுத்தியுள்ளது. அதற்கான எந்தச் சாக்குப் போக்கையும் நான் கூறவிரும்பவில்லை' என்று தெரிவித்திருந்தார். என்விடியாவின் நிர்வாகக் குழுவிடமும் ஜென்சன் இதைத் தெரிவித்தார். பதவியை ராஜினாமா செய்தார்.

காத்ரினாலியுங்

இதுபோன்று உளவு பார்த்து, தகவல்கள் சேகரிக்க பெண்களை அனுப்பி வைப்பது புதிதல்ல. மோகவலை வீசிய நிறையப் பெண் ஒற்றர்கள் அமெரிக்காவில் இதற்கு முன்பும் சிக்கி உள்ளனர்.

அமெரிக்காவில் அரசியல்வாதிகளை மோகவலையில் சிக்க வைத்து, அரசாங்கத்தில் நடக்கும் ரகசிய தகவல்களைப் பெற்று சீனாவுக்கு அனுப்பும் வேலைகளில் சில பெண்கள் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு.

சீனாவைச் சேர்ந்த கிறிஸ்டினா பாங் என்ற பெண், அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக வந்தார். ஆனால், அவர் படிப்பைத் தவிர, மற்ற வேலைகளில் ஆர்வம் காட்டினார். உளவு பார்த்தார். அமெரிக்கா பார்லிமென்ட் பிரதிநிதி எரிக் ஸ்வால்வெல் என்பவரையும், ஓகியோ மாகாண கவர்னரையும் ஒரே நேரத்தில் தன் காதல் வலையில் வீழ்த்தினார். ஒகியோ அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக சில தடைகளை விலக்க வேண்டும் என்பதுதான் அவளுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. அதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்கவே இந்த மோகவலை.

இதை அமெரிக்க கூட்டாண்மை போலீசார் (எப்பிஐ) கண்டுபிடித்து எச்சரித்தனர். ஊருக்குப் பறந்துவிட்டார்.

எரிக்ஸ்வால்வெல், கிறிஸ்டினா பாங்

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா புடினா என்பவர் அமெரிக்காவில் படிக்க வந்தார். ஆனால், அவரும் படிப்பதைத் தவிர மற்ற வேலைகளைப் பார்த்தார். அமெரிக்காவில் அரசியல் வட்டாரத்தில் உயர் மட்டத்தில் நடக்கும் விவகாரங்களைக் கண்டறிந்து, யார் யார் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தகவல் கொடுக்க வேண்டும் என்பது இவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

இதனால் தன்னைவிட 30 வயது மூத்தவரான ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் பால் எரிக்சன் என்பவருடன் நெருக்கமாகப் பழகினார். ஆனால், உளவுத் துறை கண்டுபிடித்து தண்டித்தது.

மற்றொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்து, தொழில்முனைவராக இருப்பவர் காத்ரினா லியுங். இவரை சீனா பயன்படுத்திக் கொண்டது. இவர் உளவு பார்க்க சம்பளம் கொடுத்தது. சுமார் 18 ஆண்டுகளில் 17 லட்சம் டாலர் அவருக்கு சம்பளமாக வந்துள்ளது. இவர் எப்பிஐ உயர்போலீஸ் அதிகாரிகள் ஜேம்ஸ் ஸ்மித், வில்லியம் கிளீவ்லாண்ட் ஆகிய இருவருடன் நெருங்கிப் பழகினார். எப்பிஐ துறைக்கு இன்பார்மர் போலச் செயல்படவும் செய்தார். ஆனால், அவர் எப்பிஐ-யின் மிக ரகசிய ஆவணங்களைப் படம்பிடித்து சீனாவுக்கு அனுப்பி வந்தார். இவரையும் கண்டுபிடித்து தண்டித்தனர்.

மரியாபுடினா

கார்ப்பரேட் - தனியார் - அரசு அலுவலகங்களில் இந்த மாதிரி 'உறவுகள்' ஏற்படத்தான் செய்கின்றன. சில வெளிச்சத்துக்கு வரும். பல அந்தந்த அலுவலகத்துக்குள் புதைந்து போகும். அப்படி வெளியே வந்து சர்ச்சைக்குள்ளான சில தொடர்புகள் இதோ.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ûஸ, மனைவி மெலிண்டா திருமணம் செய்து 27 ஆண்டுகள் கழித்து, 2021-இல் பிரிந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவருடன் பில் கேட்ஸýக்கு 'தொடர்பு' இருந்ததாகச் சொல்லப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தரப்பிலிருந்து மறுப்பு வந்தாலும், 2026 பிப்ரவரி 24 அன்று ஒரு கலந்துரையாடலில், கேட்ஸ் தனது திருமண வாழ்க்கையின் போது இரண்டு உறவுகள் இருந்ததாக ஒத்துக் கொண்டார். அமெரிக்க செக்ஸ் குற்றவாளி எப்ஸ்டீன் கோப்புகளில் ஒரு ரஷ்ய பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருக்கும் படம் வெளியானது. அதன்பிறகே தொடர்பை ஒப்புக்கொண்டார்.

புகழ்பெற்ற 'ஜெனரல் எலக்ட்ரிக்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் வெல்ச், 2002 தொடக்கத்தில், அப்போதைய 'ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ' இதழின் ஆசிரியரான சூசி வெட்லாஃபருடன் கொண்டிருந்த தொடர்பு வெளியானது. தொடர்ந்து சூசி வெட்லாஃபர் ஆசிரியர் பதவியைத் துறந்தார். வெல்ச், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சூசி வெட்லாஃபரை 2004-இல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து வணிகப் புத்தகங்களை எழுதியுள்ளனர். வெல்ச் 2020-இல் காலமானார்.

2013-இல், 'கூகுள்' நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் அவரது மனைவியும், '23ஹய்க்ஙங்' நிறுவனத்தின் நிறுவனருமான ஆன் வோஜிட்ஸ்கி சுமார் ஆறு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்தனர். இந்தப் பிரிவு குறித்து 'அப்ப்பட்ண்ய்ஞ்ள்ஈ' என்ற தொழில்நுட்ப இணையதளம் செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து, கூகுளின் 'கிளாஸ்' குழுவில் சந்தைப்படுத்தல் மேலாளராகப் பணியாற்றிய அமண்டா ரோசன்பெர்க்குடன் செர்ஜி பிரின் நெருக்கமாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து 'வேனிட்டி ஃபேர்' இதழும் விரிவாக எழுதியிருந்தது. 2015-ஆம் ஆண்டு மே மாதம் செர்ஜி பிரின் - ஆன் வோஜிட்ஸ்கி பந்தம் விவாகரத்தானது.

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான 'அஸ்ட்ராணமர்'ரின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி பைரன், 'கோல்ட்ப்ளே' இசை நிகழ்ச்சியில் தலைமை மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் நெருக்கமாக இருந்ததைக் காட்டும் 'கிஸ் கேம்' வைரல் காணொலிக்குப் பிறகு, ஜூலை 2025-இல் ராஜினாமா செய்தார். இருவரும் வேறு நபர்களைத் திருமணம் செய்திருந்தனர். அதன் பிறகு, கிறிஸ்டின் கபோட்டும் 'அஸ்ட்ராணமர்' நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆனால், இவர்கள் உறவைத் தொடரவில்லை. ஆண்டி பைரன் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். கிறிஸ்டின் கபோட் 'சிங்கிள் மதராக' குழந்தைகளுடன் வாழ்கிறார்.

செர்ஜி பிரின்

'ரிப்ளிங்' நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரசன்ன சங்கருக்கும், அவரது மனைவியான திவ்யா சசிதருக்கும் இடையே பொதுவெளியிலும் சட்ட ரீதியாகவும் மோதல்கள் 2025-இல் வெடித்தன. இதில், 'திறந்த திருமணம்' (ர்ல்ங்ய் ம்ஹழ்ழ்ண்ஹஞ்ங்) குறித்த குற்றச்சாட்டுகள், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, சர்வதேச குழந்தை காவலுரிமை (ஸ்ரீன்ள்ற்ர்க்ஹ்) தொடர்பான தர்க்கங்கள் என இரு தரப்பிலிருந்தும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 2025 மே மாதம், பிரசன்னா சங்கர் - திவ்யா சசிதர் இடையிலான திருமணம் மற்றும் குழந்தை காவலுரிமை தொடர்பான சிக்கலைத் தீர்க்க, இந்திய உச்ச நீதிமன்றம், வழக்கை மத்தியஸ்தத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

-சுதந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.