சிரி... சிரி...
கல்யாணத்துக்குக் கடன் வாங்கிட்டு, அதை ஏன் விவசாயக்கடன்னு சொல்றீங்க?
'கல்யாணத்துக்குக் கடன் வாங்கிட்டு, அதை ஏன் விவசாயக்கடன்னு சொல்றீங்க?'
'கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்தானே!'
-க.நாச்சிமுத்து, திண்டுக்கல்.
Advertisement
Advertisement
'பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து ரொம்ப பொறாமை வருதுன்னு சொல்றீங்களே, அவர் அவ்
வளவு வசதியானவரா?'
'இல்லைங்க... அவர் படுத்த உடனேயே நல்லா குறட்டைவிட்டுத் தூங்குறாரே!'
-எம். பி .தினேஷ், இடையர்பாளையம்.
'அந்த ஜோசியர்கிட்ட மட்டும் ஏன் நிறைய அரசியல்வாதிங்க வர்றாங்க?'
'வீட்டுக்கு ரெய்டு எப்ப வரும்னு கரெக்டா சொல்வாராம்!'
'ஆஸ்பத்திரியில தனியா இருக்க ஒரே பயமா இருக்கு, டாக்டர்!'
'அப்ப வெளியே போய் நாலஞ்சு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வாங்க!'
-தீபிகா சாரதி, சென்னை 5.
'பயப்படாமல் இருந்தாலே உங்களுக்குப் பாதி வியாதி குணமாயிடும்.'
'உங்க பீஸ் இரண்டாயிரம்னா எப்படி டாக்டர் பயப்படாமல் இருக்கமுடியும்?!'
-வி.ரேவதி, தஞ்சை.
'இந்த உலகத்துல நல்ல மனிதர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது?'
'எதுக்கும் 'கூகுள்'ல தேடிப் பாருங்களேன்!'
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.