முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உண்மை சம்பவத்தை தழுவி

ஸ்பெல் பவுண்ட் பிலிம்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மைக்கேல்பட்டி ராஜா'.  

Updated On : 14 மார்ச் 2021, 6:00 am IST
பகிர்:


ஸ்பெல் பவுண்ட் பிலிம்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மைக்கேல்பட்டி ராஜா'.  

நிகேஷ்ராம், பெர்லின், கோவை சரளா, ரவிமரியா,  "நான் கடவுள்'  ராஜேந்திரன், தம்பி ராமையா,  கெளசல்யா, ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் எஸ்.பிரான்ஸிஸ்.  படம் குறித்து இயக்குநர் பேசும் போது....

""2012-ஆம் ஆண்டு  நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  தன் காதலனுடன் அரபிகளை ஏமாற்றிப் போலியான ஆவணங்கள் மூலம்  தமிழகம் வந்த ஒரு அரபுப் பெண், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை மையமாகக் கொண்ட கதை இது.

Advertisement

அரபுப் பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் நிலைமையை விளக்கும் படம். அரபு நாட்டுக்கு வேலைக்காக செல்லும் கதாநாயகன், புரோக்கர்களால் ஏமாற்றப்படுகிறான். தமிழ் மட்டும் தெரிந்த அவர், அங்கேயே கஷ்டப்பட்டு முன்னுக்கு வருகிறான். அவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு அரபு பெண்ணால் ஈர்க்கப்படுகிறான். அதே வேளையில் ஒரு பேய் அவனை துரத்துகிறது. பேயிடம் இருந்து அவன்  தப்பித்தானா?

அரபுப் பெண்ணுடன் காதல் கொண்டதால், மாட்டிக் கொண்டானா? அடுத்து என்ன நடக்கிறது எனபதை விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்லுவதே கதை.  கதைக்களம் அரபு நாடு என்பதால், நிஜ அரபுப் பெண்ணையும் நிஜ அரபிகளையும், நிஜ பாகிஸ்தானிகளையும் நடிக்க வைத்திருக்கிறேன். இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என்றார் இயக்குநர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.