வேலை... வேலை... வேலை...
பொது பிரிவினருக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இளைஞர்மணிவேலை... வேலை... வேலை...
பொது பிரிவினருக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலை
பதவி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்
காலியிடங்கள்: 542
கல்வித் தகுதி: சிவில்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்/ அர்கிடெக்சர் பிரிவுகளில் பி.ஈ/ பி.டெக் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பதாரரின் விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களையும், புகைப்படத்தையும் இணைத்து, ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 (ஆன்லைன் வழியே செலுத்த வேண்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: 2018 GATE தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%20ADVT%202018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-04-2018
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த கடைசித் தேதி: 02-05-2018
எக்ஸிம் வங்கியில் வேலை
பதவி: அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபிஸர்
காலியிடங்கள்: 05
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணினி அறிவு வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினர் 40 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 43 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/2018/Exim%20AO.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-04-2018 மாலை 5 மணி
இந்தியன் வங்கியில் வேலை
பதவி: Assistant General Manager, Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager
துறைகள்: Information Technology Department / Digital Banking Department, Information Systems Security Cell, Treasury Department, Risk Management Department, Security Department, Credit, Planning and Development Department, Premises and Expenditure Department
மொத்த காலியிடங்கள்: 145
கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.indianbank.in என்ற இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தைப் பதிவு செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600; எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிக்கு ரூ.100 .ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.indianbank.in/pdfs/SOENG.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-05-2018
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
பதவி: நீதிபதிகளுக்கு தனி உதவியாளர்கள்
காலியிடங்கள்: 71
பதவி: பதிவாளர்களுக்கு தனி உதவியாளர்கள்
காலியிடங்கள்: 10
பதவி: துணை பதிவாளர்களுக்கு தனி எழுத்தர்
காலியிடம்: 1
அனைத்துப் பதவிகளுக்கும் கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் ஆட்டோமேஷன் கணினி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: எஸ்.சி/ எஸ்டி/ எம்பிசி/ பிசி விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்ளும், மற்றவர்களுக்கு 18 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு- ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த படிவத்தையும் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து, recruitment.mhc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
முகவரி: Registrar General, High Court, Madras 600-104.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய/ விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 02-05-2018