வேலை... வேலை... வேலை...
25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
இளைஞர்மணிவேலை... வேலை... வேலை...
25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை
பதவி: Manager (Information Security)
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Senior Manager (Information Security)
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Manager (Information System Audit)
காலியிடங்கள்: 6
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Senior Manager (Information System Audit)
காலியிடங்கள்: 6
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
அனைத்துப் பதவிகளுக்கும் கல்வித்தகுதி:
கணினி அறிவியல்/ கணினி தொழில்நுட்பம்/ கணினி அறிவியல் & பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம்/ எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ இன்பர்மேஷன் செக்யூரிட்டி/ சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் பி.ஈ./ பி.டெக் அல்லது முதுகலைப் பட்டத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடனோ/ முதல் வகுப்பிலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CISA/ CISSP/ CISM / DISA /CCFP/CHFS/CEH சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன் அனுபவம் தேவை.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.iob.in என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.500; எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100
மேலும் விவரங்களுக்கு:
www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDITOfficers.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04-08-2018.
மத்திய ஜவுளித்துறையில் வேலை
பதவி: முதுநிலை உதவியாளர் (நெசவு)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கைத்தறி நெசவு, தறி அமைத்தல் போன்ற பணிகளில் குறைந்தது மூன்றாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். கைத்தறி தொழில்நுட்பத்தில் மூன்றாண்டு டிப்ளமோ/கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் டிப்ளமோ/ கைத்தறி நெசவில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பதவி: இளநிலை உதவியாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், டெக்ஸ்டைல்ஸ் டையிங்/ பிரிண்டிங் டிரேடில் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்த பிறகு மூன்றாண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது) நெசவாளர் சேவை மையம்/ ஜவுளி, நெசவு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் 4 மாதங்களுக்குக் குறையாமல் படித்து, குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பதவி: உதவியாளர் (நெசவு)
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், ஜவுளி நெசவு/ வைண்டிங்/ வார்பிங் துறைகளில் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்து, இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது) நெசவாளர் சேவை மையம்/ ஜவுளி, நெசவு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் 4 மாதங்களுக்குக் குறையாமல் படித்து, குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, சில பிரிவினருக்கு உச்சவரம்பில் விலக்கு உண்டு.
பணியிடங்கள்: சென்னை, காஞ்சிபுரம், சேலம், விஜயவாடா, கண்ணூர், ஹைதராபாத், பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை: www.handlooms.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Weavers Service Centre, C.1.B, Rajaji Bhavan, Besant Nagar, Chennai - 600090.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்முறை தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:
www.handlooms.nic.in/writereaddata/Advertisements/636657166217458720Advt%20for%20the%20posts%20in%20South%20Zone_2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 6-08-2018.
ரிசர்வ் வங்கியில் வேலை
பதவி: Manager (Technical - Civil) in Grade ‘B
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கிணையான பட்டப்படிப்பில் எல்லா செமஸ்டர்களிலும் 60 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: உதவிப் பொறியாளர் நிலைக்குச் சமமான பதவியில் குறைந்து 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவி: Assistant Manager (Rajbhasha) in Grade ‘A
காலியிடங்கள்: 8
கல்வித்தகுதி: ஆங்கிலம்/ ஹிந்தி முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவி: Assistant Manager (Protocol and Security) in Grade ‘A
காலியிடங்கள்: 4
தகுதி: முப்படைகளில் கமெண்டர் நிலையிலோ அல்லது துணை ராணுவப் படைகளில் உதவி கமெண்டர் நிலையிலோ 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவி: Assistant Librarian In Grade ‘A'
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: கலை/ வணிகம்/ அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டத்துடன் நூலக அறிவியல்/ நூலகம், தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ முடித்தவர்கள், NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி/எஸ்.டி./ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு
மேலும் விவரங்களுக்கு:
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT19072018E62D09A7 42E64F929B1FEB9C1D1D57D1.PDF என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09-08-2018.