FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

பணச் சிக்கல் இல்லாமல் எழுவதும்,மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதுமே  ஆரோக்கியம்.

Updated On : 26 ஜூன் 2018, 7:12 pm IST
பகிர்:

சமுக நூலிலிருந்து....

அப்பா யார் யாருக்கோ எழுதிய லெட்டரில் இருந்த வரிகள் எல்லாம்,
மறந்துபோய்விட்டன. அதில் ஒவ்வொரு பாராவுக்கும் கீழே "நிற்க', "நிற்க' என்று எழுதியிருந்தது இப்போதும் மனசில் நின்று கொண்டே இருக்கிறது.
நிற்க.

- மானா பாஸ்கரன்

Advertisement

Advertisement


வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்கக் கூடாது.
ஆனால்...
ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக்கூடாது.

- மாமல்ல வாசன்


பேசி முடிவுக்கு வரலாம்
என்பவர்களிடம் பேசுவது எளிது...
ஆனால்... 
இதுதான் பேசணும் என்று 
முடிவெடுத்துவிட்டு 
பேசுபவர்களிடம் 
பேசுவது கடினம்.

- ஜெயபிரகாஷ்


சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்
நெஞ்சி கிழிஞ்சிடுச்சே... 
எங்கே முறையிடலாம்?
காவிரி கங்கை ஆறுகள் போலே...
கண்கள் இரண்டும் நீராட...

- பெ. கருணாகரன்


கெட்டவனை விட 
மோசமானவன்...
நல்லவனைக்
கெட்டவனா
மாத்துறவன். 

- கிரிதரன்

சுட்டுரையிலிருந்து...

ஒரு சாதாரண வீட்டில்
உயர் ரக ம்ர்க்ங்ழ்ய் க்ஷண்ந்ங் இருந்தால்,
அந்த வீட்டில் குட்டிச்சாத்தான் ஒன்று 
கடைக்குட்டியாக பிறந்துள்ளது என அறிக.

- மனோஜ்குமார்

பணச் சிக்கல் இல்லாமல் எழுவதும்,
மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதுமே  ஆரோக்கியம்.

- சின்னப்பையன்


சாலையில் வேகமாக உயிரை விட பயணிப்பவர்களுக்கு...
வழி விட்டு விடுங்கள்.
இல்லையேல் உங்களையும் 
இ(டி)ழுத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

- சரவணன்

உனக்கெல்லாம் "பட்டா"தான் புத்தி வரும்னு பெரியவங்க சொல்றது...
அடி"பட்டு'
அவமான"பட்டு'
அனுபவ"பட்டு'
துன்ப"பட்டு'
வேதன"பட்டு'
போன்ற இந்த 
பட்டுகளை தான்
சொல்றாங்களோ?

- விடியலைத் தேடி

நீயும் மருத்துவரா? 
புரியவே இல்லை...
கையெழுத்து 

- எழில்விழி

வலைதளத்திலிருந்து...

கோபம் வந்தால் மற்றவர்களை முட்டாள் என்று திட்டுவதைப் பார்க்கிறோம். தம்முடைய கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாதவர், புரிந்து நடக்காதவர் எல்லாருமே முட்டாள் என்று தான் பலர் நினைக்கின்றனர் போலும்.

உலகத்தோடு ஒத்துப் போகாதவனைச் சில சமயம் முட்டாள். சராசரி பொது அறிவு இல்லாதவனையும் அறிவிலி என்று சொல்கிறோம். 

நேற்று, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலே அறிவுப்பூர்வமான ஒரு கேள்வி கேட்டார்கள். நான்கு படங்கள் விஜய் நடித்ததாம். எந்த வருஷத்தில் வெளியிடப்பட்டது என்று பழைய படம் முதல் கூறு.

இந்த சினிமா பற்றிய அறிவில் நான் சுத்தம். "இது கூடவா தெரியல்ல' என்னும் விதமாய் என் மனைவி என்னைப் பார்ப்பது போல் தோன்றியது.

முட்டாள்தனம் என்பதை அறிவு என்பதற்கு எதிர்ப்பதம் என்று எடுத்துக் கொண்டால், அறிவு என்பதற்கு ஆயிரம் இலக்கணங்கள் இருக்கின்றன. ஆக, அதை விட முட்டாள் தனத்தை விளக்குவதே அறிவு என்று நினைத்தேன்.

முட்டாள்தனம் என்பது ஒரு குறிப்பிட்டு "எக்ஸ்' என்று சொல்ல இயலாது.
ஏன் எனில் அது ஒரு ஸ்பெக்ட்ரம்.

0 இருந்து 100 வரை ஒரு வானவில் மாதிரி ஒன்று வரைந்தால், நாம் எல்லோருமே ஏதாவது ஒரு புள்ளியில் இருக்கத்தான் செய்வோம் என்று தோன்றுகிறது. 

என்ன! நான் கொஞ்சம் நூற்றுக்குப் பக்கத்திலே இருப்பேன். இருந்தாலும் செண்டம் இல்லை.

http://subbuthatha72.blogspot.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments