மகளிர்மணி

பார்லி பாத் 

பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு நறுக்கிய குட மிளகாய், வெங்காயம், இஞ்சியைப் போட்டு நன்கு வதக்கவும், நெய்யில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து அதில்

கா.அஞ்சம்மாள்

தேவையானவை: 

பார்லி - 200 கிராம்
வறுத்த வேர்க்கடலை - ஒரு கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
துருவிய கேரட் - ஒரு கிண்ணம்
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு 
தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு நறுக்கிய குட மிளகாய், வெங்காயம், இஞ்சியைப் போட்டு நன்கு வதக்கவும், நெய்யில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டு உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும். 

குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

மலராட்டம்... ராஷி சிங்!

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

SCROLL FOR NEXT