திருமண பந்தத்தில் இணைந்த மலாலா!
பாகிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து 2008-இல் அவர்களுக்கு எதிராக, மலாலா எழுதத் தொடங்கினார்.
பாகிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து 2008-இல் அவர்களுக்கு எதிராக, மலாலா எழுதத் தொடங்கினார். பின்னர் 2012-இல் பெண்களுக்கான கல்வி குறித்து பிரசாரம் செய்யத் தொடங்கினார். இதனால், தாலிபானைச் சேர்ந்த ஒருவன் அவரை, சுட்டதில் கடுமையான காயம் அடைந்தார்.
அதன்பின், பாகிஸ்தான் மிலிட்டரி மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கிருந்து இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு, அங்கேயே தங்கி தனது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தார். மீண்டும் பெண் கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த மலாலாவுக்கு, 2014-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார் மலாலா.
Advertisement
Advertisement
இதுகுறித்து, மலாலா தனது ட்விட்டர் பதிவில், அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார். அசர் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராக பதவி வகித்தவர். பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் லீக் போட்டியான பிபிஎல் அணியை நிர்வகித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அசர் மாலிக்கும் மலாலாவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் அவர்களது குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.