முகப்பு
மகளிர்மணி

மைதா ஆரஞ்சு கேக்

Updated On : 14 ஏப்ரல் 2024, 4:58 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

மைதா மாவு, உப்பு சேர்க்காத வெண்ணெய், சர்க்கரை- தலா 500 கிராம்

ஆரஞ்சு எசென்ஸ்- 4 தேக்கரண்டி

Advertisement

Advertisement

ஆரஞ்சு கலர்- சிறிதளவு

பேக்கிங் பௌடர்- 3 தேக்கரண்டி

ஆரஞ்சு பீல்- 100 கிராம்

துருவிய ஆரஞ்சுப் பழத் தோல்- 2 தேக்கரண்டி

சூடான பால்- 4 கிண்ணம்

ஆரஞ்சுப் பழச்சாறு- 2 கிண்ணம்

செய்முறை:

மைதா ஆரஞ்சு கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெய், சர்க்கரை, எசென்ஸ், கலர் ஆகியவற்றைச் சேர்த்து நுரை வரும்வரை அடிக்கவும். பின்னர், மைதா, பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டையும் சேர்த்து சலித்துவைத்து கொள்ளவும். பின்னர், ஆரஞ்சு பீலைத் துண்டு துண்டாக நறுக்கி, அதனை மைதாவுடன் கலக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய்க் கலவையுடன் சேர்த்து, பின்னர் அதனுடன் ஆரஞ்சு தோலைச் சேர்த்து அடிக்கவும். இத்துடன் மைதா கலவை, ஆரஞ்சு பழச்சாறு, சூடான பால் ஆகியவற்றைச் சேர்த்து மாவைத் தளர்வாக தோசை மாவு பதத்துக்குக் கலந்து, மைக்ரோவேவல் 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்தால், சுவையான கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.