FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

தேயிலையை ஓவனில் 180 டிகிரிக்கு 10 நிமிடங்கள் சூடாக்கி, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாள்களுக்கு நன்றாக இருக்கும்.

Updated On : 12 ஜூலை 2026, 4:02 am IST
வெண்டைக்காய்
பகிர்:

அமுதா அசோக்ராஜா

தேயிலையை ஓவனில் 180 டிகிரிக்கு 10 நிமிடங்கள் சூடாக்கி, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாள்களுக்கு நன்றாக இருக்கும்.

வெண்டைக்காயின் மீது சிறிது கடுகு எண்ணெய் தடவினால், நீண்ட நாள்களுக்கு வாடாமல் இருக்கும்.

Advertisement

Advertisement

இஞ்சி, பூண்டு விழுது கெடாமல் இருக்க முதலிலேயே தனித்தனியே எண்ணெயில் வதக்கிவிட்டு, பின்னர் அரைத்து அதே எண்ணெயில் போட்டு வைக்கவும்.

பழங்களைத் திறந்த பாத்திரத்தில்போட்டு மூடி வைக்காமல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், நீண்ட நாள்களுக்கு நன்றாக இருக்கும்.

பட்டன் காளான்களை உப்புடன் சேர்த்த நீரில் போட்டு கொதிக்கவிடவும். ஒரு நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டி ஆற வைத்து, காற்றுப் புகாத பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாது.

காளான்கள், கத்தரிக்காய்களை பிளாஸ்டிக் பைகளில் போடாமல், காகிதத்தில் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கெடாது.

தூதுவளையை நீரில் போட்டு சுட வைத்து அருந்தினால் காது இரைச்சல் நின்றுவிடும்.

இரவில் மூக்கடைப்பு வந்தால், மின்விசிறியின் கீழே உறங்கக் கூடாது. சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்தவும். மல்லாந்து படுத்தால் மூக்கடைப்பு அதிகமாகும்.

கருங்குருவை அரிசி சாதமானது நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சம நிலையில் வைத்திருக்கும். வாயு, இடுப்பு வலியைப் போக்கும்.

தாமரைப் பூ இதழ்களைத் தண்ணீரில் விடாமல் அரைத்து அதில் இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவி ஒரு மணி நேரம் கழித்துக் கழுவினால், கண் வளையம் மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments