தேன் மிட்டாய் செய்யும் முறை...
தேன் மிட்டாய் செய்யும் முறை பற்றி...
தேவையான பொருள்கள்:
சர்க்கரை -1கிண்ணம்
புளிக்காத இட்லி மாவு -1கிண்ணம்
Advertisement
Advertisement
சமையல் சோடா -1/4 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு கலர் பவுடர் -1/4 மேஜைக்கரண்டி
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் அளவுக்குப் பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சோடா உப்பு, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவு கலவையை சிறு, சிறு உருண்டைகளாக போட்டு நன்றாக வெந்தவுடன் எடுத்து, சூடான பாகில் மிட்டாய் உருண்டைகளை போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான தேன்மிட்டாய் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.