FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அங்கிள் ஆன்டென்னா

கேள்வி:  உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான  (வலிமை மிக்க) உயிரினம் எறும்புதான் என்கிறார்களே, இது உண்மையா?

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கேள்வி:  உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான  (வலிமை மிக்க) உயிரினம் எறும்புதான் என்கிறார்களே, இது உண்மையா?

பதில்:  உடல் வலிமை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்.

உயிரினங்களின் தேவைக்கேற்ப, அவற்றின் உருவ அமைப்பு, எடை, அளவு, திறமை, வலிமை ஆகியவை இருக்கும். மேலும் பரிணாம வளர்ச்சியாலும் உயிரினங்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்கின்றன. இந்தத் திறமை அவை வாழுமிடத்துக்கேற்ப மாறுபடும்.

Advertisement

Advertisement

அளவில் பெரிய யானைக்கு, அதனுடைய உடலைத் தூக்கிக் கொண்டு நடப்பதற்கேற்ற வலிமை வேண்டுமல்லவா?  உலகில் மிகப் பெரிய விலங்கான நீலத் திமிங்கிலங்கள், நீருக்குள்ளே வாழ்ந்தாலும் அவற்றுக்கும் தேவையான அளவு வலிமை இருந்தால்தான் அவை வாழும் காலம் வரை நிம்மதியாக வாழ முடியும் அல்லவா? அதுபோலத்தான் எறும்புகளும்.

அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் அதற்குத் தேவையான வலிமையையும் இறைவன்  கொடுத்திருக்கிறார். இந்த வலிமை சற்றே அதிகம் என்றுதான் தோன்றுகின்றது. அளவுக்கேற்ற வலிமை என்று பார்த்தால், மிகப் பெரிய யானைக்கு இருப்பதைக் காட்டிலும் சிறிய எறும்புக்குத்தான் வலிமை அதிகம்.

எறும்பு தனது எடையைப் போன்று ஐம்பது  மடங்கு அதிக எடையைக்கூட, அநாயசமாகத் தூக்கக்கூடிய வலிமை உள்ளவை.

எறும்பு போல நாமும் எடை தூக்க வேண்டும்  என்றால்... சராசரியாக 60 கிலோ எடையுள்ள மனிதன் மூவாயிரம்  கிலோ எடையைத் தூக்க வேண்டும்.  தூக்குகிற  (நடக்கிற) காரியமா இது?

யோசித்துப் பாருங்கள்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments