மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்!
செல்வச் செழிப்பில் பிறந்தவர்செருக்கு இன்றி வளர்ந்தவர்நல்ல படிப்பில் உயர்ந்தவர்
செல்வச் செழிப்பில் பிறந்தவர்
செருக்கு இன்றி வளர்ந்தவர்
நல்ல படிப்பில் உயர்ந்தவர்
நாட்டின் அடிமை ஒழித்தவர்!
மக்கள் உயர உழைத்தவர்
மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்!
மார்பில் ரோஜா அணிந்தவர்
மனிதருள் மாணிக்கம் ஆனவர்!
அண்ணல் காந்தி சொற்களை
அன்பாய் ஏற்று நடந்தவர்!
பஞ்ச சீலக் கொள்கைதனைப்
பகர்ந்து வெற்றி கொண்டவர்!
Advertisement
Advertisement
சாந்தம் கொண்டு நெஞ்சிலே
தனது கடமை ஆற்றினார்!
மாந்தர் வாழ்வில் நேசமே
மலர வேண்டி வாழ்ந்தவர்!