நடை வண்டி!
தம்பிப் பாப்பா ஓட்டவே தச்சர் செய்த வண்டியாம்!சின்னக் கையில் தள்ளினால்
தம்பிப் பாப்பா ஓட்டவே
தச்சர் செய்த வண்டியாம்!
சின்னக் கையில் தள்ளினால்
சீறிக்கொண்டு போகுமாம்!
குட்டித் தம்பி நடக்கவே
கூட்டிக்கொண்டு போகுமாம்!
தத்தித் தத்தி நடந்துமே
தானே நடக்கப் பழக்குமாம்!
மட்டமான தரையிலே
மளமளவென்று ஓடுமாம்!
குட்டிப் பள்ளம் இருந்தாலோ
குலுங்கிக் குலுங்கி ஆடுமாம்!
Advertisement
Advertisement
தம்பிக் காகக் கடையிலே
தாத்தா வாங்கி வந்ததாம்!
இந்த அழகு வண்டிக்கு
இட்ட பேரு "நடை வண்டி!'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.