முகப்பு
சிறுவர்மணி

தென்னம்பிள்ளை!

அப்பா குழியை வெட்டினார்அதிலே உரத்தைக் கொட்டினார்!

Updated On : 19 ஜூன் 2021, 8:48 pm IST
பகிர்:


அப்பா குழியை வெட்டினார்
அதிலே உரத்தைக் கொட்டினார்!
குட்டிப் பிள்ளையை வைத்துமே 
சுற்றி வேலி கட்டினார்!

அம்மா நடந்து சென்றுமே 
அல்லிக் குளத்துத் தண்ணீரைக் 
கொண்டு வந்து குடத்திலே 
குட்டிப் பிள்ளைக்கு ஊற்றினாள்!

அம்மா, அப்பா உழைப்பிலே
அந்தப் பிள்ளை வளர்ந்ததை
என்றும் மறவா திருந்ததே
ஏற்ற பருவம் அடைந்ததே!

Advertisement

Advertisement

களைத்தபோது அவர்களை
கையால் தாங்கும் பிள்ளையாய்
இளநீர், வழுக்கை கொடுத்துமே 
இதயம் குளிர வைத்ததே!

சக்தி யற்றே முதுமையில் 
தரையில் முடங்கிய போதிலே 
மட்டை, தேங்காய், பாளையை 
விற்றுக் கொள்ளக் கொடுத்ததே!

நன்றி மறவா பிள்ளையே 
நாட்டில் தென்னம் பிள்ளைதான்!
அந்தப் பிள்ளை போல் காக்கணும் 
அம்மா, அப்பாவை நீயுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments