காமன்வெல்த் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்!
காமன்வெல்த் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கியது குறித்து...
காமன்வெல்த் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள் மூவருக்கு மொத்தமாக ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் புதன்கிழமை (ஆக 5) வழங்கினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் மூன்று பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்கள் மூவருக்கும் ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகையை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி, தலைமைச்செயலகத்தில் மூவரையும் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கிய நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பங்கேற்றார்.
Advertisement
Advertisement
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலின் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை அவரது தந்தை எஸ். சித்திரவேலிடம் முதல்வர் விஜய் வழங்கினார்.
மேலும், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
இதனிடையே 2026 பட்ஜெட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay presented a total cash Prize money of Rs 80 lakh to three athletes from Tamil Nadu who won medals at the Commonwealth Games on Wednesday (August 5).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.