FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

நூலினைப் பகுத்துணர்

வளரும் பயணம் -சிறுமியிலிருந்து பெண்ணாக - (எம்.கே. வனிதா; பக்கம் 56; ரூ.99; விங்ஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை- 83.

Updated On : 26 ஜூலை 2026, 4:10 am IST
பகிர்:

வளரும் பயணம் -சிறுமியிலிருந்து பெண்ணாக - (எம்.கே. வனிதா; பக்கம் 56; ரூ.99; விங்ஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை- 83. 96003 98660.

குழந்தைப் பருவத்தில் இருந்து பருவம் அடையும் முக்கிய காலகட்டத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில சவால்களை எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதில் ஹார்மோன்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்த நூலில், பதின்மப் பருவத்தில் குறிப்பாக பெண்கள் தங்கள் உடல் பற்றியும், அச்சமயத்தில் அவர்கள் உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சாரல் என்கிற பெண்ணும், அவளின் அம்மா வித்யாவும் திறந்த மனதுடன் உரையாடுகிறார்கள். அதில், 'பருக்கள் வளர்வது ஆரோக்கியத்தின் அடையாளம். அதை அவமானமாக நினைக்கக் கூடாது' என்று பருக்களில் ஆரம்பித்து, பல்வேறு விஷயங்கள் மகளுக்குச் சொல்லப்படுகிறது.

மாதவிடாய் என்பது பெண்கள் உடலில் ஓர் இயற்கையான செயல்பாடு. மாதவிடாய் சுழற்சி என்பது பொதுவாக எத்தனை நாள்களுக்கு ஒரு முறை வரும், அப்போது ரத்தம் எவ்வளவு வெளியேறும், உடலில் என்னென்ன அசௌகரியம் ஏற்படும், அதற்கு தீர்வு என்ன, மாதவிடாய் நிறுத்தம் எப்போது நடக்கும் என்று சாரலின் தாயார் விரிவாகக் கூறும் இடத்தில் அவர் மகளுக்கு தோழியாக மாறிவிடுகிறார்.

'உரிய நேரத்தில் நீ வேலைக்குப் போகவேண்டும், தனியாகச் செயல்பட வேண்டும் என்றால், நீ முதலில் முழு வளர்ச்சி அடைய வேண்டும், அதற்கு அம்மா தரும் சத்தான உணவுகளைச் சாப்பிட்டால் போதும்' என்று கூறும் இடத்தில் சாரலின் தாயார் மருத்துவராக மாறிவிடுகிறார்.

மனநிலை மாற்றங்களும் உணர்வுகளும், மாதவிடாய், சுகாதாரம், என் உடல் என் உரிமை, மூடநம்பிக்கையை உடைப்போம், ஆண்களும் பருவமடைதலும், சத்தான உணவும் ஆரோக்கியமும், மனநல ஆரோக்கியம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் எதிர்காலம் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கருத்துகள் இளம் பிராயத்தினருக்குப் புரியும் வகையில் இந்நூலில் எளிமையாக இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments