சிறுவர் நூல் அரங்கம்
குழந்தைகளிடம் கனவுகள் இருக்கட்டும்; அதில் இயற்கையும், அன்பும், அறிவும், மனிதநேயமும் இருக்கட்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, இந்நூலில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த தலைமுறைக்கான அறிவார்ந்த கதைகள்
ராசி அழகப்பன் - ரூ.120
Advertisement
Advertisement
குழந்தைகளிடம் கனவுகள் இருக்கட்டும்; அதில் இயற்கையும், அன்பும், அறிவும், மனிதநேயமும் இருக்கட்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, இந்நூலில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன.
'வண்ணத்துப்பூச்சியும் வருங்காலமும்' என்ற கதையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கார்த்திக் என்ற மாணவன், வழியில் காருக்குள் அடிபட்டுக் கிடந்த முதியவரையும் பெண்மணி ஒருவரையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவனிடத்தில் பலவித மாற்றங்கள் உண்டாகின்றன. இதையெல்லாம் அறிந்த கார்த்திக்கின் பெற்றோர் 'நல்ல பிள்ளையை தான் பெற்றிருக்கிறோம்' என்று மகிழ்கிறார்கள்.
இதிலுள்ள சிறுகதைகள் குழந்தைகளின் கற்பனை உலகை விரிவுபடுத்தும்; நற்பண்புகளை மேம்படுத்தும்.
(பேஜஸ் பப்ளிகேஷன், சென்னை - 600 119.
✆ 91768 04412)
அப்துல் கலாம்: ஏவுகணை மனிதரின் வாழ்க்கைக் கதை
அ.சோழராஜன் - ரூ. 190
தமிழ்நாட்டின் ராமேசுவரம் தீவில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். தமிழ்த் தாயின் தவப்புதல்வன். 'ஏவுகணை நாயகன்' என்ற பெயரைப் பெற்றவர்.
'நாம் காணும் கனவு நிச்சயமாக நனவாகும்' என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த அப்துல் கலாமின் இளமைப் பருவம், பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு, எம்.ஐ.டி. படிப்பு, அந்தந்தக் காலகட்டத்து அனுபவங்கள், குழப்பமான சூழ்நிலையில் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் சுவாமி சிவானந்தரை அவர் சந்தித்தது, சிவானந்தர் வாக்கு கலாமுக்கு புதிய ஒளியை ஏற்படுத்தியது எனப் பல்வேறு தகவல்கள் எளிமையாக, சுவையாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.
கோரல் வெளியீடு, சென்னை - 600 055.
✆ 90430 50699)