FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தீபாவளி டிப்ஸ்!

 முள் தேன்குழல்  தேவையானவை:  அரிசி-1கிலோ  கடலைப்பருப்பு-1கிலோ  பாசிப்பருப்பு-250கிராம்  சீரகம்-200கிராம்  உப்பு, எண்ணெய்-தேவையான அளவு  செய்முறை:  முதலில் கூறப்பட்டுள்ள மூன்றையும் ஒன்றாக திரித்துக் கொள

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

 முள் தேன்குழல்

 தேவையானவை:

 அரிசி-1கிலோ

Advertisement

Advertisement

 கடலைப்பருப்பு-1கிலோ

 பாசிப்பருப்பு-250கிராம்

 சீரகம்-200கிராம்

 உப்பு, எண்ணெய்-தேவையான அளவு

 செய்முறை:

 முதலில் கூறப்பட்டுள்ள மூன்றையும் ஒன்றாக திரித்துக் கொள்ள வேண்டும். மாவு நைசாக இருக்க வேண்டும். பிறகு சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, சீரகம், வெண்ணெய் இவற்றையெல்லாம் மாவுடன் சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு மாவை முள்ளு தேன்குழல் அச்சில்போட்டு பிழிந்து வெந்ததும் எடுத்து வைக்க வேண்டும்.

 ஃபேஷன் லட்டு

 தேவையானவை:

 நெய்-750கிராம்

 கடலைமாவு-1கிலோ

 பால்-1/2லிட்டர்

 பாதாம்பருப்பு-400கிராம்

 கற்கண்டு-100கிராம்

 ஏலக்காய்-10கிராம்

 செய்முறை:

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு நன்றாகக் காயவிட வேண்டும். கடலை மாவை போட்டு கரண்டியினால் நன்றாகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த மாவு வறுபட்டு பதம் வந்தவுடன் நல்ல வாசனை கிளம்பும் சமயம் பாலை தெளித்து கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். இந்த விதமாக பாலைத் தெளித்து வறுப்பதால் கடலைமாவு மிருதுவாகவும் உதிரியாகவும் இருக்கும். மேலும் வாணலி நிரம்ப உதிரியாகும். இந்த சமயம் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம் பருப்பு எடுத்துப் பொடியாக நறுக்கி கலந்துவிடவும். தூள் செய்த கற்கண்டு, ஏலக்காய்பொடி சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.

 ஆர்.ஜெயலெட்சுமி,

 திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments