முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அர்ஜூன் கதை எழுதும் படம்!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா, சுராஜ் உதய் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் பான் இந்தியா படம், 'மார்டின்'. நடிகர் அர்ஜூன் கதை எழுதியுள்ளார்.

Updated On : 8 செப்டம்பர் 2024, 5:19 pm IST
நடிகர் அர்ஜூன்
பகிர்:

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா, சுராஜ் உதய் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் பான் இந்தியா படம், 'மார்டின்'. நடிகர் அர்ஜூன் கதை எழுதியுள்ளார்.

வசனம் எழுதி ஏ.பி.அர்ஜூன் இயக்கியுள்ளார். துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் நடிக்கின்றனர். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பொறுப்பை ரவி பஸ்ரூர் ஏற்றுள்ளார். வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 13 மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற அர்ஜூன் உருக்கத்துடன் பேசியதாவது...

Advertisement

Advertisement

''என் சகோதரியின் மகன் துருவா சர்ஜாவை (மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி) தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் எனக்கு 2 ரோல்கள். ஒன்று, துருவாவின் மாமா. ஆனால், அவனை என் மகனாகப் பார்க்கிறேன். இன்னொன்று, திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் 5-ஆவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அவனுக்கு என்னைப்போல் ஒரு கதை எழுத வேண்டும் என்று யோசித்து இக்கதையை எழுதினேன். ஆக்ஷன், எமோஷன், காதல் என வித்தியாசமான திரைக்கதை, நிறைய வெளிநாட்டு நடிகர், நடிகைகள் என்று எல்லாமே இருக்கிறது. இப்படத்துக்காக தனது உடல் அமைப்பை மாற்றி நடித்துள்ளார். அது அவருக்கு பிடித்தமான ஒன்று'' என்றார் அர்ஜூன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments