ஆக.2-ல் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழா! எங்கு தெரியுமா?
நடிகர் சூர்யாவின் “விஸ்வந்தா அண்ட் சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து...
நடிகர் சூர்யா நாயகனாக நடித்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள புதிய படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. 40 வயது நாயகனுக்கும் அவரை விட 20 வயது குறைவான நாயகிக்கும் இடையிலான காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, நடிகர் சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கில் பாடிய இப்படத்தின் 2-வது பாடலான வெட்டிங் சாங் மற்றும் டீசர் விடியோ ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான “கருப்பு” படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
the audio launch of the film "Viswanath and Sons," starring actor Suriya, will take place on August 2nd.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.