முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மிக நீண்ட பயணப் பேருந்து..

நாட்டில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளும் உள்ளன. இதில், முதல் இடம் பிடிப்பது ஜோத்பூரில் இருந்து பெங்களூரு தடத்தில் இயங்கும் பேருந்துதான்.

Updated On : 19 ஜனவரி 2025, 12:05 am IST
பகிர்:

நாட்டில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளும் உள்ளன. இதில், முதல் இடம் பிடிப்பது ஜோத்பூரில் இருந்து பெங்களூரு தடத்தில் இயங்கும் பேருந்துதான்.

இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே பயண தூரம் 2 ஆயிரம் கிலோ மீட்டர். இது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் என நான்கு மாநிலங்களின் வழியாக, அகமதாபாத், வதோதரா , சுரத், நாசிக்,, பெல்காம், ஹுப்ளி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகப் பயணிக்கிறது.

வழியில் கிராமங்கள், சிறு நகரங்கள், பெரிய நகரங்கள், மிகப் பெரிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. சில சமயம் கடற்கரை என பலமாறுபட்ட சூழலில் செல்வதால் பயணம் இனிமையானது. பயண நேரம் 36 மணி நேரத்துக்கும் அதிகம்.

Advertisement

Advertisement

தில்லி-லே இடையிவான பேருந்து பயணம்தான் மிக நீணட தூரப் பேருந்து பயணம் என்று கூறுவர். இதன் தூரம் 1,075 கி.மீ. மட்டுமே. ஹிமாசல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயங்குகின்றன. இந்த வழித்தடத்தில் மலைகள், பனி படர்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள்... என கண்களை கவரும் பல ரம்மியமான காட்சிகளைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments