உலகில் மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனைப் படைத்த உத்தரகண்டைச் சேர்ந்த பெண்
உலகிலேயே மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைப் பற்றி....
உத்தரகண்டைச் சேர்ந்த பெண் உலகிலேயே மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரானார்.
உத்தரகண்டைச் சேர்ந்தவர் ரேணு தரியல். இவர் யூட்யூபராகவும் உள்ளார். அண்மையில் இவர் ஒரு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். உலகிலேயே மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்).
ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் அலீயா நசிரோவாவின் பின்னுக்குத் தள்ளி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அலீயா நசிரோவாவின் கூந்தலின் நீளம் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) ஆகும்.
Advertisement
Advertisement
ரேணு 2015 முதல் தொடர்ந்து தனது முடியை வளர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 2015 முதல் தொடர்ந்து என் முடியை வளர்த்து வருகிறேன். இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.
இதுவே எனது முடியை இவ்வளவு நீளமாக வளர்க்க எனக்கு ஊக்கமளித்தது" என்றார்.
An Indian woman who hasn't gotten her hair cut since 2015 earned the Guinness World Record when her long locks were measured at 8 feet and 10 inches in length.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.