FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக்கதிர்: விஷ்ணு விஷாலை பாராட்டிய ரஜினிகாந்த்!

'கட்டா குஸ்தி-2' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்.

Updated On : 19 ஜூலை 2026, 4:11 am IST
நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

'கட்டா குஸ்தி-2' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார். இதனை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவில், ' செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர்.. இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல... ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணியிருக்கீங்க.

ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், நல்ல பெர்ஃபார்மன்ஸ். குட்டி சாரா பாப்பா... எப்படிப் புடிச்சீங்க? ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க. விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு. இன்னும் நல்ல படங்கள் நிறைய குடுங்க' என்று ரஜினிகாந்த் வாழ்த்தியிருப்பதாக விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த மீட்டிங் பற்றியும், அங்கு சக நடிகர்களை அவர் சந்தித்தது பற்றியும், நடிகர் சங்கக் கட்டடம் திறப்பு பற்றியும் பதிவிட்டிருக்கிறார் விஷால். அதில் அவர், 'நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எனது திரையுலகக் குடும்பத்தைச் சந்தித்தேன். எங்களது நீண்ட நாள் கனவான, அந்தப் பாரம்பரியமிக்க 'தென்னிந்திய நடிகர் சங்க' கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக ஒட்டு மொத்தக் குழுவும் முழு வீச்சில் தயாராக உள்ளது.

பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. ஆம், அந்தப் பெருமிதமான தருணத்தை நோக்கி நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அது மிகத் தொலைவில் இல்லை. இறைவனின் அருள் நிலைக்கட்டும்' எனப் பதிவிட்டிருக்கிறார்.

காளி வெங்கட்

காளி வெங்கட் தனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட அந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் விடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. முப்பதாண்டுகள் கழித்து, தான் படித்த பள்ளிக்கூடத்துக்குச் சென்ற அனுபவம் குறித்து காளி வெங்கட் பேசியிருக்கிறார்.

'கிட்டத்தட்ட 30 வருஷம் கழிச்சு மறுபடியும் ஸ்கூலுக்குள்ள போகும் போது ஏதோ முதல் நாள் ஸ்கூலுக்குப் போற மாதிரியான ஓர் உணர்வு இருந்துச்சு. முதல் முதல்ல ஸ்கூலுக்குள்ள போகும்போது ஒரு பதற்றம் இருக்கும்ல... அந்தப் பதற்றத்தை என்னால அப்படியே ஃபீல் பண்ண முடிஞ்சுது. ஆனா, எல்லா பேட்ச் மாணவர்களும் வர விரும்புனதால, கிட்டத்தட்ட 1,200 மாணவர்கள் இந்த ரீயூனியன்ல கலந்துகிட்டாங்க. இந்த ரீயூனியன் இவ்வளவு பெரிசா நடக்க நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். இதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்கிறார்.

நடிகை ரோஜா

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் 'அன்பே டயானா' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ரோஜா. இப்படத்தில் அவர் 'வக்கலங்கா சரளா' என்ற அன்பான, அதே சமயம் பவர்புல்லான அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்துப் பேசிய நடிகை ரோஜா, 'ஒவ்வொரு காட்சியிலும் என் சொந்தக் குடும்பத்தில் என் பையன், பொண்ணு, கணவர் செல்வாவோடு நான் எப்படி இருப்பேனோ, அதுவே எனக்கு நினைவுக்கு வந்தது. மேலும், இப்படத்தின் டப்பிங் பேசும்போது எனக்கே கண்ணீர் வந்தது. கேமராமேன் ஷெல்லி சிங்கிள் ஷாட்களுக்காக கிம்பல் தூக்கிக்கொண்டு மிகவும் ரிஸ்க் எடுத்து உழைத்துள்ளார். மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் நல்ல பாடல்களைத் தந்துள்ளார். நிறைவாக உணர்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments