முகப்பு
தமிழ்மணி

ஒட்டக்கூத்தர் காலத்தில் மணமகன் தேடல்...

சங்க காலத்தில் மணமகனைத் தேடியதாகப் பதிவுகள் ஏதுமில்லை. பெரும்பாலும் அவை காதல் மணமே. அங்கு வசதியுள்ளவனா, ஏழையா என்பதெல்லாம் ஏதும் பதிவாகவில்லை.

Updated On : 27 அக்டோபர் 2019, 1:31 am IST
பகிர்:

சங்க காலத்தில் மணமகனைத் தேடியதாகப் பதிவுகள் ஏதுமில்லை. பெரும்பாலும் அவை காதல் மணமே. அங்கு வசதியுள்ளவனா, ஏழையா என்பதெல்லாம் ஏதும் பதிவாகவில்லை. தலைவியைக் கண்டு காதலுறும் தலைவனை மனம் ஒத்து மணந்ததாகத்தான் பதிவுகள் உண்டு.

11-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டப் பதிவு (ராமாயணம்) சற்று முரண்படுகிறது. பெண்ணைப் பெற்ற தந்தை, தாயாரின் எதிர்பார்ப்பு வேறு; பெண்ணின் எதிர்பார்ப்பு வேறாய் உள்ளது எனப் பாடல் (243) தெரிவிக்கின்றது. (இராவணன் பிறப்புப் படலம்). 

 "குலம் வேண்டும் என்றிருப்பர் குளத்துள்ளார்
    கல்வியினால் குறையா ஞானப்
பலம் வேண்டும் என்றிருப்பர் தந்தைமார்
    பரந்த பெருஞ்செல்வம் உள்ள
தலம் வேண்டும் என்றிருப்பர் தாய்மார்கள்
    யௌவனமும் அழகுஞ் சார்ந்த
நலம் வேண்டும் என்றிருப்பர் நாறுகுழல்
    கன்னிமார் நலத்தின் மிக்கார்'

Advertisement

Advertisement

ஒரே ஒரு வேறுபாடுதான். மணமகளை அழைத்து வந்து மணமகனைப் பார்க்கும் நிலை. பாராட்ட வேண்டிய ஒன்று. மணமகனைப் பிடித்ததும் கேட்கும் கேள்வி,

"பின்னும் மயன் கூறுவன் நின்பே ரெழிலும்
யௌவனமும் பேச வேண்டா
உன்வழியும் உன்பதியும் உன்பெயரும்
உன் நலமும் உரைத்தி' 


என்ற மணமகள் வீட்டாருக்கு, "ஆயிரம் வேதம் கற்றவன்' எனத் தன்னை இராவணன் அறிமுகம் செய்து கொள்கிறான்.

        "... .... அயன்மைந்தன் மகன் மைந்தன்
        அணி இலங்கா புரியை யாளும்
        மன்னவன் பேர் தசக் கிரீவன் மறைகள்
        ஓராயிரம் யான் வல்லேன்' என்றனன்!' 
        (உ.கா.245)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.