FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பகுத்தறிந்து வாழ்வோருக்கு துன்பமில்லை

நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பொறுமையுடன் தம் வாழ்வினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு என்றும் துன்பம் நேர்வதில்லை.

30 ஆகஸ்ட் 2026, 1:00 pm IST
பகிர்:

பகுத்தறிந்து வாழ்வோருக்கு துன்பமில்லை

அறிவது அறிந்தடங்கி, அஞ்சுவது அஞ்சி,

உறுவது உலகுவப்பச் செய்து,-பெறுவதனால்

Advertisement

Advertisement

இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது.

(பாடல் 74 அதிகாரம்: பொறை உடைமை)

அறிய வேண்டிய நன்மை தீமைகளைப் பற்றிய நுட்பங்களை எல்லாம் அறிந்து அடக்கம் உடையவராகி, அஞ்சி ஒதுங்குவதற்குரிய பழிச்செயல்களுக்கு அஞ்சி ஒதுங்கித் தமக்கு நேர்ந்த காரியத்தை உலகம் உவக்குமாறு முறையே செய்து இன்பமுற்று வாழுகின்ற இயல்பினை உடையவர்கள்,

எப்போதும் துன்பமுற்று வாழ்தல் என்பதே அரிதாகும். நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பொறுமையுடன் தம் வாழ்வினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு என்றும் துன்பம் நேர்வதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments