அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப், பேதை,
ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப், பேதை,
'பெருந்தோளி! பெய்வளாய்! என்னும், மீப் போர்த்த
Advertisement
Advertisement
கருந்தோலாற் கண்விளக்கப் பட்டு.
(பாடல் 47 அதிகாரம்: தூய்து அன்மை)மலங்களால் ஊறி, வெறுக்கத்தக்கதாக விளங்கும் ஒன்பது துவாரங்களாகிய புலன்களும் அசுத்தக் குழம்புகளைச் சிதறிச்சிதறி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உடலாகிய அசுத்தப் பாண்டத்தைப் 'பேதையாள்!'
எனவும், 'பெருந்தோளினாள்' எனவும், 'இடப்பட்ட வளையல்களை உடையவளே' எனவும், அதன்மீது போர்த்திருக்கிற அழகான தோலினால், கண்களுக்கு ஒளிபெறும் படி மயக்கஞ் செய்யப்பட்டு, அறிவற்றோர் போற்றுவார்கள். 'அறிவுடையோர் அதனை வெறுத்து, உயிர்க்கு உறுதி தருகின்ற அறவழியாகிய துறவுநெறியிலே மனஞ் செலுத்துவார்கள்' என்பது கருத்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.