FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெடுங்காலம் வேதனை தரும்

திருமணம் கடந்த உறவை பிறர் காண நேர்ந்தால், செல்பவனுக்கு மட்டுமல்லாது அவன் குடும்பத்திற்கே பழிச்சொல் ஏற்படும்.

11 வினாடிகள் முன்பு
பகிர்:

காணின் குடிப்பழியாம்; கையுறின், கால்குறையும்;

ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்;}நீள்நிரயத்

துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீகண்ட

Advertisement

Advertisement

இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

(பாடல் 84 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)

திருமணம் கடந்த உறவை பிறர் காண நேர்ந்தால், செல்பவனுக்கு மட்டுமல்லாது அவன் குடும்பத்திற்கே பழிச்சொல் ஏற்படும். கையோடு அகப்பட்டுக் கொண்டாலோ காலையே முறித்து விடுவார்கள். மாட்சியற்ற அந்தச் செயலைச் செய்யுங்காலத்து எழும் அச்சமோ மிகுதியாகும்.

அந்தச் செயல், நெடுங்காலம் அனுபவிக்கும்படியான நரக வேதனையையும் தரும். ஆகவே, தீய செயலிலே ஈடுபடுபவனே! நீ அதனாற் கண்ட இன்பம் எவ்வளவோ? எனக்குச் சொல்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.