முகப்பு
வெள்ளிமணி

புஷ்கரத்தின் தத்துவம்!

ஒரு சமயம் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தார். பிரம்மா குரு பகவான் முன்பு தோன்றி "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 

Updated On : 1 அக்டோபர் 2021, 8:01 pm IST
பகிர்:

ஒரு சமயம் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தார். பிரம்மா குரு பகவான் முன்பு தோன்றி "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 

குரு பகவான் "தங்களிடமுள்ள மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதியாகிய "புஷ்கரம்' தனக்கு வேண்டும்!' என்று கேட்டார். 

பிரம்மாவும் "கொடுக்கிறேன் எடுத்துக்கொள்!' என்று கூறிவிட்டார். ஆனால் "புஷ்கரம்' அதை மறுத்து, "நான் பிரம்மாவிடமே இருக்க விரும்புகிறேன்!' என்று சொல்லிவிட்டது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளான பிரம்மா -  குரு பகவானுக்கும், புஷ்கரத்திற்கும் இடையே - ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். 

Advertisement

Advertisement

அதாவது, குரு பகவான் மேஷ ராசி முதல் மீன ராசி வரையுள்ள 12 ராசிகளில் பிரவேசித்த முதல் 12 நாட்களும், அந்த ராசியிலிருந்து விலகப்போகும் முன்புள்ள 12 நாட்களும் அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் "புஷ்கரம்' வாசம் செய்து, மக்களின் பாவங்களைப் போக்கி நன்மை செய்ய வேண்டும் என்பதே அந்த உடன்படிக்கை. 

அதன்படி, மேஷ ராசியில் குரு பகவான் இருக்கும்போது புஷ்கரம் கங்கை நதியிலும், ரிஷப ராசியில் உள்ளபோது நர்மதை நதியிலும், மிதுன ராசியில் உள்ளபோது சரஸ்வதியிலும், கடக ராசியில் உள்ளபோது யமுனையிலும், சிம்ம ராசியில் உள்ள போது கோதாவரியிலும், கன்னி ராசியில் உள்ளபோது கிருஷ்ணா நதியிலும், துலா ராசியில் உள்ளபோது காவிரியிலும், விருச்சிக ராசியில் உள்ளபோது தாமிரபரணியிலும், தனுசு ராசியில் உள்ளபோது சிந்து நதியிலும், மகர ராசியில் உள்ளபோது துங்கபத்ரா நதியிலும், கும்ப ராசியில் உள்ளபோது பிரம்ம புத்ராவிலும், மீன ராசியில் உள்ளபோது பிரணீதா நதியிலும் "புஷ்கரம் வாசம் செய்யும்' என்றும் உடன்பாடு ஏற்பட்டது.  எனவே, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரத்தில் மூழ்கினால் நம் பாவங்களும் சாபங்களும் நீங்கும், இறைவனுடைய திருவருளைப் பெறலாம் என்பது ஐதீகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments