வார பலன்கள் (ஜூலை 3 - 9) 12 ராசிகளுக்கும்! வருமானம் உயரும் இந்த ராசிக்கு!
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூலை 3 - 9) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபமடைவீர்கள்.
விவசாயிகள் காய்கனிகளைப் பயிரிட்டு வருமானத்தைக் கூட்டிக்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பீர்கள்.
Advertisement
Advertisement
பெண்கள் ஓய்வு எடுத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் தேவைக்கேற்ப இருக்கும். சுபச்செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களே எதிரிகளாக மாறுவார்கள். கலைத்துறையினர் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்கள் வீடு வாங்கும் முயற்சியை துரிதப்படுத்தவும். மாணவர்கள் உடற்பயிற்சிகளிலும் தவறாது ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். சாதுர்யமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளால் லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் பதவிகளுக்கு ஆசைப்பட்டு தகாத வழியில் செல்லவேண்டாம். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் ஏற்பட்ட குழப்பங்களிலிருந்து நீங்கிவிடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 3.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வருமானம் படிப்படியாக உயரும். அரசுத்துறைகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். வியாபாரிகள் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் நன்மை உண்டு.
அரசியல்வாதிகளுக்கு பொறுமையும் நாவடக்கமும் அவசியம். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். பெண்கள் உழைப்புக்குத் தேவையான ஓய்வை எடுத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்துவருவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 4, 5.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். ஆரோக்யம் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு தங்களிடமிருந்த அவநம்பிக்கைகள் விலகும். வியாபாரிகள் கூட்டாளிகளின் உதவியுடன் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க கூடுதல் செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
பெண்கள் குடும்ப வளர்ச்சிக்கு மிகவும் பாடுபடுவீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க முயற்சி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 6, 7, 8.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து வந்த தடை நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் அலுவலக வேலைகளைச் செய்து நற்பெயரெடுப்பீர்கள். வியாபாரிகள் கடின உழைப்பை மூலதனமாக்கி லாபம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் கடன் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு ஊக்குவிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஓப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் கலகலப்பான சூழலைக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 9.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலில் ஏற்றமான சூழ்நிலை நிலவும். உற்றார் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குக் கிடைத்த வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச்செல்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தொலைதூர செய்திகளால் மகிழ்வார்கள். கலைத்துறையினர் முயற்சிகளை கூர்மையாக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் பெரியவர்களின் அறிவுரைகளை மதித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நெருக்கடியான சூழ்நிலைகளை பொறுமையுடன் கையாளுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு உரங்கள் வகையில் மானியங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்தை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் சிறப்பான ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் மனநிலையை உணர்ந்து செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
நயமாகப் பேசி புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக்குலுங்கும்.
உத்தியோகஸ்தர்கள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சிரமம் அதிகரிக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர்வகைகளைப் பயிரிட்டு பலனடைவீர்கள்.
அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத்துறையினர் சிறுசிறு வாய்ப்புகளால் மீண்டு வருவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
கடுமையாக உழைத்துப் பணியாற்றுவீர்கள். உங்கள் கனவுகளும் திட்டங்களும் பலிதமாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் பாராமுகத்தைக் கண்டுகொள்ளமாட்டீர்கள். வியாபாரிகள் வங்கிக் கடன் பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரம் மூலம் உபரி வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக காரியமாற்றுவீர்கள். கலைத்துறையினர் பொருளாதாரம் உயரக் காண்பீர்கள். பெண்கள் அவசியமான பயணங்களைச் செய்வீர்கள். மாணவர்கள் விளையாட்டில் முதல்
தரமாக விளங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம், மனவளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைக்கும்.வியாபாரிகள் நண்பர்களிடம் மனம் திறந்து பேசுவீர்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திடம் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குழப்பங்கள் ஏற்படுத்தும் உற்றார் உறவினர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பீர்கள். மாணவர்கள் கடினமான பயிற்சிகளால் சாதனைகளுக்கு வித்திடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வெளியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு கீழ்ப்பணிபுரிபவர்கள் தக்க தருணத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். வியாபாரிகள் கூடுதல் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு துறையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( July 3 - 9). Read and benefit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.