வார பலன்கள் (ஜூலை 17 - 23) 12 ராசிகளுக்கும்! மழலை பாக்கியம் யாருக்கு?
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூலை 17 - 23) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தீயோரின் நட்பைத் தவிர்த்து விடுவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்குச் செலவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் நன்மை தரும் அலுவலகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் தேவையான முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
Advertisement
Advertisement
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம்.
கலைத்துறையினர் கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பீர்கள்.
மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
பங்கு வர்த்தகத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்வீர்கள். அரைகுறையாக நின்ற அனைத்து வேலைகளையும் முழுமையாக முடித்து விடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். வியாபாரிகளுக்குச் சீரான வருமானம் கிடைக்கும். விவசாயிகள் பயிர் சுழற்சி முறையைக் கையாளுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பெண்கள் வீடு வாங்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தவறாது ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலை செம்மையாக நடத்துவீர்கள். பூர்விக சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்புக்குப் பிறகே பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். விவசாயிகள் புதிய சந்தைகளில் விளைபொருள்களை விற்று லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வீண் போகாது. பெண்கள் கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழிலில் சிறப்பான வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு அலுவலக வேலைகளைக் கற்றுத் தருவார்கள்.
வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்குக் கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் பொறுப்புடனும் நாவடக்கத்துடனும் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைப்படி நடந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அவநம்பிக்கைகள் நீங்கப் பெறுவார்கள். வியாபாரிகள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் கடன்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிரமத்துக்குப் பிறகு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். மாணவர்கள் வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அவநம்பிக்கைகள் நீங்கப் பெறுவார்கள். வியாபாரிகள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் கடன்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிரமத்துக்குப் பிறகு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். மாணவர்கள் வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை குறித்த நேரத்துக்குள் செய்து முடித்து விடுவீர்கள்.
வியாபாரிகள் புதிய சந்தைகளில் வியாபாரம் செய்து லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்குக் கால்நடைப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.
அரசியல்வாதிகள் அநாவசியப் பயணங்களைத் தள்ளிப் போடவும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் பெரியவர்களின் அறிவுரைகளை மதித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் உழைத்து முன்னேறுவீர்கள். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். புதிய வீட்டிற்கு மாறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து, லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியின் ஆதரவு ஊக்கமளிக்கும். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும்.
பெண்களுக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை மன நிறைவை ஏற்படுத்தும். மாணவர்கள் பெற்றோரின் மனநிலையை உணர்ந்து செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
இக்கட்டான தருணங்களில் மனோ தைரியம் கூடும். அமானுஷ்ய கலைகளில் ஆர்வம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் வீண் விவாதங்களைத் தவிர்த்து வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் வங்கிக் கடனை சுலபமாகப் பெறுவீர்கள். விவசாயிகள் ஊடு பயிர்களால் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உள்கட்சி பூசல்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் சற்று மந்தமாகவே இருக்கும்.
பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வந்து நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவினால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உங்களின் புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எதுவும் இராது.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் கிண்டல் பேச்சுகளைக் கண்டுகொள்ளமாட்டீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீட்டில் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் சிறு சிறு வாய்ப்புகளால் மீண்டு வருவீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் விளையாட்டிலும் முதல்தரமாக விளங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 17, 18.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
புதிய வேகத்துடன் உங்கள் செயல்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவீர்கள். உங்கள் வழியில் தனித்துப் பயணிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் மனம் திறந்து பேசுவீர்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சி மேலிடத்திடம் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். மாணவர்கள் கடுமையான பயிற்சிகளால் சாதனைகளுக்கு வித்திடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 19, 20.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் புதிய ரகசியங்களை அறிந்துகொள்வீர்கள். முக்கிய முடிவுகளை தீர்க்கமாக யோசித்து எடுப்பீர்கள். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் தக்க தருணத்தில் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் கூட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு துறையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பெண்கள் அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 21, 22, 23.
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( July 17 - 23). Read and benefit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.