✕
முகப்பு

எந்த கோயிலில் என்ன விஷேசம்?

வேலூர், கோவை, சென்னை ஆகிய மூன்று கோயில்களில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் பற்றி..

~
பகிர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கம்மவார் புதூரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மௌனகுரு சுவாமிகள் ஜீவசமாதி சன்னதி மகா கும்பாபிஷேகம் நவம்பர் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம், சிங்காரம்பாளையம் கிராமம், பெரிய படியனூர் கிராமம் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் நவம்பர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலில் நவம்பர் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் ஆதிபுரீஸ்வரர் சுவாமியின் கவசம் திறக்கப்படும். அதன்பிறகு மூன்று நாள்கள் தைல அபிஷேகம் நடைபெறும்.

Advertisement

Advertisement

மூன்று நாள்களுக்குப் பிறகு நவம்பர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கவசம் மூடப்படும். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் விசேஷ பூஜையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.