முகப்பு
உலகம்

பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு: இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் சீனா! 

பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்று இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் வகையில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல் 2018, 4:37 pm IST
பகிர்:

பெய்ஜிங்: பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்று இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் வகையில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேக சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை போல் செயல்படுபவர்களை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. நாங்கள் அவர்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் சரியான பதிலடியை கொடுப்போம்.

Advertisement

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்று இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் வகையில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் குறித்த மோடியின் விமர்சனம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சங்யிங்கிடம் செய்தியாளர்களிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் பேசும் பொழுது, 'பயங்கரவாதம் அனைத்து தரப்பிற்கும் எதிரியாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட சர்வதேச சமூதாயம் இணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

பொதுவாகவே பாகிஸ்தானை பாதுகாக்கும் விதமாக சர்வதேச அரங்கில் அந்நாட்டுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிகைக்கும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments