ஜிம்பாப்வே: மீண்டும் கான்ஸ்டென்டினோ
ஜிம்பாப்வேயின் துணை அதிபராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டென்டினோ சிவெங்காவை அதிபர் எமர்ஸன் நங்கக்வா மீண்டும் நியமித்துள்ளார்.
ஹராரே: ஜிம்பாப்வேயின் துணை அதிபராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டென்டினோ சிவெங்காவை அதிபர் எமர்ஸன் நங்கக்வா மீண்டும் நியமித்துள்ளார். கடந்த ஆண்டு துணை அதிபராக இருந்த நங்கக்வாவை அப்போதைய அதிபர் ராபர் முகாபே நீக்கியபோது, அப்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த கான்ஸ்டென்டினோ முகாபேயின் ஆட்சியை முடக்கினார். அதனைத் தொடர்ந்து முகாபே ராஜிநாமா செய்ததும், நங்கக்வா அதிபராகப் பொறுப்பேற்று, கான்ஸ்டென்டினோவை துணை அதிபர் ஆக்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.