FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்க விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கியத் தாலிபான் தலைவர் பலி

பாகிஸ்தானின் முக்கியத் தாலிபான் தலைவரான முல்லா பஸூல்லா ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Updated On : 15 ஜூன் 2018, 4:47 pm IST
பகிர்:

வாஷிங்க்டன்: பாகிஸ்தானின் முக்கியத் தாலிபான் தலைவரான முல்லா பஸூல்லா ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மத் ரத்மனிஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 'தெஹ்ரீக் இ தாலிபான்' அமைப்பின் தலைவராக 2013-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் முல்லா பஸூல்லா. அதற்கு முன்னதாக பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் அந்த அமைப்பின் தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர். குறிப்பாக பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைச் செயல்பாட்டாளரான மலாலா யூஷூபாஸி கடந்த  2012-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்ட பொழுது, அந்தப் பகுதியில், பொறுப்பாளராக இருந்து செயல்பட்டவர்.

Advertisement

Advertisement

இவர் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் புதன்கிழமை அன்று அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மரணமடைந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளரான மார்ட்டின் ஓ டோனேலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன்  அதிகாரிகள் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments