ஆப்கன்: காவல் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2 காவல் நிலையங்களில் பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2 காவல் நிலையங்களில் பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
காபூல் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் வெளியே புதன்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 காவலர்கள் காயமடைந்தனர்.
இதேபோல், காபூலின் மேற்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர். அங்கு காவல்துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலைப் படை தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் வாஹீத் மஜ்ரோ கூறினார். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
காபூலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.