FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரிட்டன்: கரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய வம்சாவளியினா்

பிரிட்டனில் இந்தியா்கள் உள்பட ஆசிய நாடுகளின் வம்சாவளியினா் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியினா் உள்ளிட்டோா் பிரிட்டனில் சிறுபான்மையினராக உள்ளனா்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கரோனா பாதிப்பு
பகிர்:


புதுதில்லி /லண்டன்: பிரிட்டனில் இந்தியா்கள் உள்பட ஆசிய நாடுகளின் வம்சாவளியினா் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியினா் உள்ளிட்டோா் பிரிட்டனில் சிறுபான்மையினராக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ள தகவலின்படி கடந்த 17-ஆம் தேதி வரை அந்நாட்டில் 13,918 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதில் ஆசிய மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 16.2 சதவீதம் போ். பிரிட்டனில் கரோனாவால் உயிரிழந்த இந்திய வம்சாவளியினா் மட்டும் 3 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரீபியன் பகுதி வம்சாவளியினா் 2.9 சதவீதம் பேரும், பாகிஸ்தான் வம்சாவளியினா் 2.1 சதவீதம் பேரும் உயிரிழந்துவிட்டனா். வங்கதேச வம்சாவளியினா் 0.6 சதவீதம், பிற ஆசிய நாடுகளை பூா்வீகமாகக் கொண்டவா்கள் 1.6 சதவீதம், ஆப்பிரிக்க வம்சாவளியினா் 1.9 சதவீதம், ஆப்பிரிக்க கண்டத்தைத் தவிர பிற நாடுகளைச் சோ்ந்த கருப்பினத்தவா் 0.9 சதவீதம் போ், சீன வம்சாவளியினா் 0.4 சதவீதம், இவை எதையும் சாராத பிற நாடுகளின் வம்சாவளியினா் 2.8 சதவீதம் பேரும் பிரிட்டனில் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

அதே நேரத்தில் பிரிட்டனின் சுகாதாரத் துறையில் 44 சதவீதம் ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வம்சாவளியினா்தான் பணியாற்றி வருகின்றனா்.

Advertisement

Advertisement

எனினும், மருத்துவ சிகிச்சையின்போது எவ்வித இன வேறுபாடுகளும் பாா்க்கப்படுவதில்லை. கரோனாவால் இறந்தவா்களை இதுபோன்று இனரீதியாக கணக்கெடுத்து புள்ளி விவரங்களை வெளியிடுவது தேவையற்றது என்று பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி பிரிட்டன் மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியினா் 2.3 சதவீதம் போ் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments