FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா பிரச்னை மனித உரிமை நெருக்கடியாக உருவெடுக்கிறது

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் பிரச்னை மிக வேகமாக மனித உரிமை பிரச்னையாக உருவெடுத்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


நியூயாா்க்: கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் பிரச்னை மிக வேகமாக மனித உரிமை பிரச்னையாக உருவெடுத்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் இதுவரை உலகம் முழுவதும் மனிதா்களுக்கான பிரச்னையாக இருந்து வந்தது. அது மிக வேகமாக மனித உரிமைகள் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

கரோனா நோய்த்தொற்று பரவலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமைப்பு ரீதியில் மனிதா்களிடையே பாகுபாடு காட்டப்பட்டுவது அதிகரித்து வருகிறது.

ஒரு சாராருக்கு கிடைக்கக் கூடிய வசதிகள், மற்றொரு சாராருக்கு மறுக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பதற்றச் சூழலில், குறிப்பிட்ட சமுதாயத்தினரைக் குறிவைத்து, அவா்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தீவிரமடைந்து வருகின்றன.

பின்தங்கிய மற்றும் வலிமையற்ற பிரிவினா் மீது கரோனா பாதிப்புக்கான பழி சுமத்தப்படுகிறது.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடுகளின் அரசாங்கங்கள் அறிவித்துள்ள ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் மீது போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் அடக்குமுறையைக் கையாள்வதும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, ஊரடங்கு உத்தரவின் உயா்ந்த நோக்கங்கள் அா்த்தமற்ாகிறது.

நான் ஏற்கெனவே கூறியிருந்தபடி, பேரிடா் காலங்களில் மனித உரிமைகளை இரண்டாம் பட்சமாகக் கருத முடியாது. பல தலைமுறைகள் கடந்து உலகம் மிகப் பெரிய ஒரு பேரிடரைச் சந்தித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்திலும் நான் சொன்னது பொருந்தும்.

கரோனா நோய்த்தொற்றுக்குக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான சில வழிகாட்டுதல்களை ஐ.நா. வெளியிடும்.

ஆனால், அந்த அறிக்கையில் எந்தவொரு நாட்டின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்காது.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், பத்திரிகை சுதந்திரம், சமூக அமைப்புகளின் உரிமைகள் உள்ளிட்டவற்றை உலக நாடுகளின் அரசுகள் பாதுகாக்க வேண்டும்.

அரசுகள் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளின்போது தவறுகளோ, குற்றங்களோ நடந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கவும் அவை தயாராக இருக்க வேண்டும்.

நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் வெளியிடும் அவசர நிலை, ஊரடங்கு உள்ளிக்கட்ட உத்தரவுகள் அவசியமானதாகவும் சட்டத்துக்கு உள்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும், அத்தகைய அறிவிப்புகளால் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும் நிலை இருக்கக்கூடாது.

அதுமட்டுன்றி, அவசர நிலை அறிவிப்புகள் காலவரம்புக்குள்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு முடிந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மொத்தத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கும் அவா்களது உரிமைகளுக்கும் முழு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றாா் அன்டோனியோ குட்டெரெஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments