முகப்பு
உலகம்

ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 28 பேர் பலி

ஏமனில் சவுதி தலைமையிலான வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 28 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 4 அக்டோபர் 2021, 1:40 pm IST
ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 28 பேர் பலி
பகிர்:

ஏமனில்  சவுதி தலைமையிலான வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 28 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுபடுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று (அக்-3) ஞாயிற்றுக்கிழமை மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தமையிலான ஏமன் கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 28 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஏமனின் மரீப் மாகாணத்தில் சமீப காலமாக ஹகுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறல் அதிகரித்து வந்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

28 பேரை சுட்டுக்கொன்றதோடு ஹவுதி அமைப்பினர் பயன்படுத்திய ஆயுதம் தாங்கிய 10 வாகனங்களும் தகர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.