FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ’தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா’ அனிமேஷன் தொடர்!

’தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா’ அனிமேஷன் தொடர் ஓடிடியில் வெளியாகுவது குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 8:07 pm IST
தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா தொடரின் காட்சி. - படம்: எக்ஸ் / சோனி லைவ்.
பகிர்:

மகாபாராதத்தின் முக்கியமான கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து ’தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா’ என்ற அனிமேஷன் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராஃபிக் இந்தியா தயாரிப்பில் சரத் ​​தேவராஜன் மற்றும் ஜீவன் ஜே காங் உருவாக்கத்தில் இந்த அனிமேஷன் தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை 31 முதல் சோனி லைவ் ஓடிடியில் முதல் காட்சியாக வெளியாகிறது.

இந்தத் தொடரில் கர்ணனின் பிறப்பு முதல் துரியோதனன் நட்பு, சமூகத்தில் அவரது போராட்டம், இறப்பு எல்லாம் காண்பிக்கப்படுமென படக்குழு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

மகாபாராதத்தின் மிகப்பெரிய வீரனான கர்ணனின் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் காண்பிக்கப்படுமென படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட தேவராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

மகாபாரத்தின் துயரமான இதயமாக கர்ணன் எப்போதும் இருக்கிறார். அவரது பிறப்பை வைத்து நிராகரித்த உலகிற்கு, அவரது திறமையின் மூலமாக தன் சொந்த கையால் உயர்ந்தவர். எப்போதையும் விட தற்போது இந்தக் கேள்விகள் உடனடியாக கேட்கப்பட வேண்டியிருக்கிறது.

மேதமை என்பது நீங்கள் பிறந்த இடத்திலிருந்தா அல்லது நீங்கள் செய்யும் செயல்களிலிருந்தா வருகிறதா என்ற கேள்வி முக்கியமாக இருக்கிறது என்றார்.

முன்னதாக, கிராஃபிக் இந்தியா பல அனிமேஷன் தொடர்களை தயாரித்துள்ளது. கடைசியாக ’தி லெஜெண்ட் ஆஃப் அனுமன்’ தொடரை ஜியோ ஹாட்ஸ்டாருக்கு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Sony LIV's animated series 'The Legend of Karna' to premiere on Jul 31

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments