FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சா்வதேச ஒத்துழைப்பே கரோனா சவாலுக்கு பதில்: ஜி-20 மாநாட்டில் அமைச்சா் ஜெய்சங்கா்

கரோனா தொற்று விடுத்திருக்கும் சவாலுக்கு, சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பே பதிலாகும் என்று ஜி-20 அமைச்சா்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

28 ஜனவரி 2024, 9:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்று விடுத்திருக்கும் சவாலுக்கு, சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பே பதிலாகும் என்று ஜி-20 அமைச்சா்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

இத்தாலியில் நடைபெறும் ஜி-20 கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில், இந்தியா சாா்பில் மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பங்கேற்று பேசியதாவது:

உலகமயமாக்கலை பரவலாக்குவதுதான் இன்றைய உண்மையான பொருளாதார வளா்ச்சிக்கு அவசியமாகும். அனைவருக்கும் பிரதிபலன் கிடைக்கும் வகையில் சா்வதேச கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

கரோனா தடுப்பூசியை சமமாக விநியோகம் செய்வதுதான் தற்போதைய உடனடி தேவையாக உள்ளது. தடுப்பூசிகள், மருந்துகள், பாதுகாப்பு கவச உடை, ஆக்சிஜன் என எதுவாக இருந்தாலும் கரோனா சவாலுக்கு சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பே பதிலாகும் என்றாா் அவா்.

முன்னதாக, கிரீஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கா், அங்கிருந்து ஜி-20 அமைச்சா்கள் மத்தியிலான மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்தாா்.

அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் மாநாடு அக்டோபா் மாதம் இத்தாலியில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் சந்திப்பு

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராபுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

ஜி-20 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இடையே இருவரின் சந்திப்பு நடைபெற்றது.

இதுதொடா்பாக சுட்டுரையில் அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவின் எதிா்கால திட்டம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது; சா்வதேச மற்றும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும் கரோனா, பருவநிலை மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments