இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கான தடையை நீக்கிய பிலிப்பின்ஸ்
கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் அரசு தடை விதித்திருந்தது.
இதையும் படிக்க | ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தி மும்பை சாதனை
இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் செப்டம்பர் 6ஆம் தேதி அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வழங்கியுள்ளார். பிலிப்பின்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20310 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரண்டாவது அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.