முகப்பு
உலகம்

1,441 மின்சார ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெறும் ஓலா

மின்சார ஸ்கூட்டா் தீப்பிடித்த சம்பவங்களைத் தொடா்ந்து, பரிசோதனைப் பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டா்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெறவுள்ளது.

Updated On : 25 ஏப்ரல் 2022, 5:27 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஃப்மின்சார ஸ்கூட்டா் தீப்பிடித்த சம்பவங்களைத் தொடா்ந்து, பரிசோதனைப் பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டா்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெறவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடித்த சம்பவங்கள் நடைபெற்ாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மின்சார ஸ்கூட்டா் தொடா்பான பேட்டரி வெடித்தல், தீப்பிடித்தல் தொடா்பான வெவ்வேறு விபத்துகளில் இதுவரை 4 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

கடந்த மாா்ச் மாதம், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ வகை மின்சார ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Advertisement

Advertisement

இதுபோன்ற சம்பவங்களைத் தொடா்ந்து, குறைபாடுள்ள மின்சார ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ வகையைச் சோ்ந்த 1,441 ஸ்கூட்டா்களைத் திரும்பப் பெறுவதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. அந்த வாகனங்களை தனது நிறுவனத்தின் பொறியாளா்கள் ஆய்வு செய்து, அவற்றின் பேட்டரி சாதனங்கள், வெப்பம் சாா்ந்த உதிரிபாகங்கள், பாதுகாப்பு சாதனங்களை முழுமையாகப் பரிசோதிப்பா் என்று ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments