பிரபஞ்சத்தின் துவக்கம் எப்படி இருக்கும்? நாசா வெளியிட்ட அற்புத புகைப்படம்
பிரபஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியின் ஒருபகுதியாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவது குறித்து தீவிரமான ஆய்வைச் செய்து வருகிறது.
அதன்படி, பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதைக் கணக்கில் கொண்டு அப்போது தோன்றிய நட்சத்திரங்கள் மற்றும் அங்கு மனிதர்கள் வாழத் தகுதிகொண்ட கிரகங்களைக் கண்டறியும் முயற்சியாக கடந்த ஆண்டு விண்வெளியில் 10 பில்லியன் டாலர்(ரூ.79,000 கோடி) செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை(The James Webb Space Telescope) நிறுவியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிரபஞ்சத்தின் மேலும் அற்புதமான புகைப்படங்கள்: நாசா வெளியீடு
இந்நிலையில், பல மாதங்கள் காத்திருப்பிற்குப் பின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்து நாசா புதிய வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
நட்சத்திரங்கள், துகள்கள் என சிதறிய ஒளிக்கதிர்களால் ஓவியம்போல காட்சியளிக்கும் இந்தப் படத்தைக் கண்ட பல விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருங்கி விட்டதாகவும் இது அறிவியல் உலகின் மகத்தான சாதனை எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.