முகப்பு
உலகம்

பிரதமர் மோடியை வரவேற்ற நேபாள பிரதமர்

நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா வரவேற்றார். 

Updated On : 16 மே 2022, 11:01 am IST
லும்பினி சென்ற பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா வரவேற்றார். 
பகிர்:

நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா வரவேற்றார். 

புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினிக்குச் செல்கிறார். 

இதையொட்டி இன்று காலை லும்பினிக்குச் சென்ற அவரை அந்நாட்டு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

Advertisement

கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த நேபாள பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த பயணம் மேற்கொண்டுள்ளார். 

லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், புத்த பூர்ணிமாவையொட்டி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்றுகிறார். மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. 

கடந்த 2014 முதல் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி நேபாளம் சென்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.