எலான் மஸ்க் வாங்கியிருக்கும் ரூ.643 கோடி மதிப்புள்ள புதிய ஜெட்
டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கியிருக்கும் புதிய தனியார் ஜெட் விமானம் மிகச் சிறப்பான பயணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கியிருக்கும் புதிய தனியார் ஜெட் விமானம் மிகச் சிறப்பான பயணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
எலான் மஸ்க் வாங்கியிருக்கும் இந்த புதிய ஜெட், அடுத்த ஆண்டுதான் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படவிருக்கிறது.
இந்த புதிய ஜெட் நிலத்திலிருந்து 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றதாகவும், இதில் 19 பேர் பயணம் செய்யும் வசதி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
எலான் மஸ்க், தனது சொந்தப் பயன்பாட்டுக்காக, ஸ்வாங்கி தனியார் ஜெட் விமானத்தை வாங்கியிருக்கிறார் என்றும், இதன் மொத்த மதிப்பு ரூ.643 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி700 ஜெட் பவர் கொண்ட இந்த ஜெட், இரண்டு ரோல்ஸ்-ரோஸ்சி எஞ்ஜின்களுடன் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 7,500 நாடிகல் மைல் தொலைவுக்கு இயங்குமாம். இந்த ஜெட் விமானம் முழுவதும் சொந்த வை-பை சேவையுடன் 20 வட்ட வடிவ ஜன்னல்களுடன் இரண்டு கழிப்பறை வசதி கொண்டதாக உள்ளதாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.