முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது தென்கொரியா
வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு இடையில் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா
தென்கொரியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி வாண்டென்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து இந்த உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் தென் கொரியா 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள ஐந்து உளவு செயற்கைக்கோள்களில் இதுவே முதன்மையானது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் வானிலை காரணமாக பின்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதுவரை தென்கொரியா விண்வெளியில் தனக்கென இராணுவ உளவு செயற்கைக்கோள்களை கொண்டிருக்கவில்லை மற்றும் வட கொரியாவின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களையே நம்பியுள்ளது.
இதையும் படிக்க| ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலைவிழா தொடக்கம்
வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை கடந்த வாரம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகக் கூறியது. அதற்கான புகைப்படங்களை வடகொரியா இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தென்கொரியாவும் தனது ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.